Saturday, January 2, 2016

CBSE மாதிரி வினாத்தாட்கள் வெளியீடு

+ 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, CBSE வெளியிட்டு உள்ளது
.மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலும், CBSE பாடத்திட்டம் அடிப்படையிலும், பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன.

இதில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகம்மூலம், வினா வங்கி, கூடுதல் வழிகாட்டி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதை விட ஒரு படி மேலாக, CBSE பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், கணிதப்பதிவியல், பொருளியல், வேளாண்மை உள்ளிட்டஅனைத்து பாடங்களுக்கும், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.வினாத்தாள் விவரங்களை, http://cbseacademic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment