Sunday, May 22, 2016

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு; நவோதயா பள்ளிகள் சாதனை

மத்திய இடைநிலை கல்வி வாரியமானசி.பி.எஸ்.இ.பிளஸ் 2 தேர்வு முடிவில்தேர்ச்சி சதவீதத்தில் நவோதயா பள்ளிகள் முதலிடத்திலும்,தனியார் பள்ளிகள் கடைசி இடத்திலும்
உள்ளன.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், 10.41லட்சம் பேர் தேர்வு எழுதி, 83.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
முதலிடம்:மண்டல அளவிலான தேர்ச்சியில்திருவனந்தபுரம் மண்டல பள்ளிகள் முதலிடத்திலும்,சென்னை மண்டலத்திலுள்ளமஹாராஷ்டிராபுதுவைசென்னைகர்நாடகா பள்ளிகள் இரண்டாம் இடமும் பெற்றன. தேசிய அளவில் பல துறை சார்ந்தசி.பி.எஸ்.இ.பள்ளிகளில்மத்திய அரசின் பார்லிமென்ட் சட்டப்படி உருவாக்கப்பட்டுமத்திய மனிதவள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் நவோதயா பள்ளிகள், 95.43 சதவீதம் எனஅதிக தேர்ச்சி பெற்றுள்ளன.
அனுமதியில்லைதனியார் சி.பி.எஸ்.இ.பள்ளிகள், 82.40 சதவீதத்துடன்தேர்ச்சியில் கடைசி இடம் பிடித்துள்ளன. கடந்த ஆண்டும்நவோதயா பள்ளிகளே முதலிடம் பெற்றன. இந்த நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவங்கதமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
சென்னை பள்ளிகளில் அதிக தேர்ச்சி:
சென்னையில் உள்ளசி.பி.எஸ்.இ.பள்ளிகளில்செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி பொருளாதாரவியல் பிரிவு மாணவி மீராகுமார், 490 மதிப்பெண்கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி பள்ளியின் அறிவியல் பிரிவு மாணவன் கிருஷ்ண மேனன், 490 மதிப்பெண்மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவன் அஷ்வின், 492 மதிப்பெண்,சென்னை நங்கநல்லுார் மாடர்ன் பள்ளி மாணவன்கோபாலபுரம் டி.ஏ.வி.பெண்கள் பள்ளி மாணவி ஹரிணி487 மதிப்பெண் பெற்றுள்ளனர். 
தேசிய அளவில் திருவனந்தபுரத்துக்கு அடுத்தபடியாகசென்னை மண்டலத்திலுள்ள தனியார் பள்ளிகள் தான்சி.பி.எஸ்.இ.பிளஸ் தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதமாக, 93.95 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

No comments:

Post a Comment