Friday, September 30, 2016

’சி.பி.எஸ்.இ., ரிசல்ட்’ தாமதம்; உயர் கல்வி சேர்வதில் சிக்கல்

மத்திய இடைநிலை கல்வி வாரியமானசி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதால்உயர் கல்விக்கு செல்ல முடியாமல்மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகம்ஆந்திராகேரளா போன்றமாநில அளவிலான பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்வு முடிவுகள்மே இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகின்றன. சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு,பிளஸ் 2 தேர்வு முடிவுகள்மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தான் வெளியாகிறது. 
சி.பி.எஸ்.இ.மாணவர்களின் மறு மதிப்பீடுமறு கூட்டல் மற்றும் உடனடி துணைத்தேர்வு முடிவுகள்,ஜூலைஆகஸ்ட் மாதத்தில்தான் வெளியாகின்றன. அதற்குள்அனைத்து இன்ஜி.கல்லுாரிகள் மற்றும் கலைஅறிவியல் கல்லுாரிகளில்மாணவர் சேர்க்கை முடிந்து விடுவதால்பல மாணவர்கள்,கல்லுாரிகளில் சேர முடிவதில்லை. 
இவர்கள்காத்திருந்துஅடுத்த ஆண்டில் தான் சேர வேண்டி உள்ளது. இந்த பிரச்னை குறித்துசேலத்தில் நடந்தசி.பி.எஸ்.இ.பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்துஅமைப்பின் தலைவர்மனோகரன் கூறுகையில்சி.பி.எஸ்.இ.பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதத்தால்மாணவர்கள் பலர்உயர் கல்வியில் சேர முடிவதில்லை. சிக்கலுக்கு தீர்வு காணசி.பி.எஸ்.இ.தேர்வு முடிவுகளைதாமதமின்றி வெளியிட வேண்டும்என்றார்

No comments:

Post a Comment