Friday, October 28, 2016

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு நடத்தப்படும், இரட்டை தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது.

கடந்த, 2010 முதல்சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு இரண்டு வகையில்ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில்பிளஸ் தொடர விரும்புவோருக்குபள்ளி அளவில் மட்டும், 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும். 
10ம் வகுப்புக்கு பின்பிற பாடத்திட்டத்தில் சேர விரும்புவோருக்குபொது தேர்வு நடத்தப்படும். ஆனால்பிளஸ் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள்சி.பி.எஸ்.இ.,யில் பொது தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தன. 
இதுகுறித்துமத்திய அரசு அமைத்த சிறப்புக் குழு ஆய்வு செய்தது. அதில்பள்ளி அளவிலான தேர்வில் தரம் குறைவு எனதெரிய வந்தது. எனவேபள்ளி அளவிலான தேர்வுக்கு முடிவு கட்டதமிழகம் மற்றும் மஹாராஷ்டிர மாநில சி.பி.எஸ்.இ.பள்ளிகள் வலியுறுத்தின. 
பெரும்பாலான ஆசிரியர்களும்பள்ளி நிர்வாகிகளும்பள்ளி அளவிலான தேர்வு வேண்டாம் என,ஆய்வுக் குழுவிடம் தெரிவித்தனர். இதையடுத்துபள்ளி அளவிலான தேர்வை ரத்து செய்யமத்திய அரசுக்கான கல்வி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. 
வரும் கல்வி ஆண்டு முதல்சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில்அனைத்து மாணவர்களுக்கும், 10ம் வகுப்பில்பொது தேர்வு மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment