Sunday, October 16, 2016

இரண்டு நாட்களில் ’நெட்’ தேர்வு ’ரிசல்ட்’

கல்லுாரி பேராசிரியர் பணிக்கானநெட் தகுதித் தேர்வு முடிவுஇரு நாட்களில் வெளியாக உள்ளது. 

கல்லுாரிகளில்பேராசிரியர் பணியில் சேரவும்கல்லுாரி மற்றும் பல்கலைகளில்முழுநேர இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேரவும்பல்கலை மானியக் குழுவின்,நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
மத்திய இடைநிலை கல்வி வாரியமானசி.பி.எஸ்.இ.மூலம்ஜூலையில் நடத்தப்பட்ட இத்தேர்வில்,எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 
தேர்வு முடிந்து மூன்று மாதங்களாகின்றனஇரண்டு நாட்களில்தேர்வு முடிவு வெளியாக உள்ளது. ஜனவரியில் நடக்க உள்ளநெட் தேர்வுக்குஅக்., 17ல்ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கும். ஜூலை தேர்வில் தேர்ச்சி பெறாதோர்இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment