மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது.
Wednesday, June 29, 2016
Tuesday, June 7, 2016
சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும் பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்
மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
Sunday, May 22, 2016
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு; நவோதயா பள்ளிகள் சாதனை
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவில், தேர்ச்சி சதவீதத்தில் நவோதயா பள்ளிகள் முதலிடத்திலும்,தனியார் பள்ளிகள் கடைசி இடத்திலும்
Friday, May 20, 2016
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகும் என தெரிகிறது.
Saturday, May 7, 2016
ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் 100 சதவீத தேர்ச்சி
கோவை மாவட்டத்தில், ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
Monday, May 2, 2016
புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை:பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை.
தேவையற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
Thursday, March 17, 2016
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை மத்திய அரசு முடிவு.
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம் குறித்துவிசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Tuesday, March 8, 2016
CBSE மோகம்..
எப்போலேர்ந்து வந்தது இந்த cbse மோகம். எனக்கு தெரிந்து matriculation பள்ளிகளை தேடி ஓடிக்கொண்டிருந்த பெற்றோர்கள், சமச்சீர் கல்வி என்று வந்தவுடன் cbse நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார்கள்.
Tuesday, March 1, 2016
'கேந்திரிய வித்யாலயா'க்களில் தேசிய கொடி ஏற்ற உத்தரவு
'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினமும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா கூடுதல் ஆணையர் யு.என்.காவரே, மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ,பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன
Monday, February 8, 2016
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அறிவிப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Monday, February 1, 2016
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் போது ஏற்படும் தேர்வு பயம் மற்றும் பதற்றத்தை போக்க, பள்ளிகள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படும்.
Friday, January 29, 2016
'சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு தமிழக அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்க முடியாது'
'தமிழக அரசின், பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால், அவை, தங்களுக்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
Tuesday, January 5, 2016
சிபிஎஸ்இ 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி இரு பாடப் பிரிவினருக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன.
Saturday, January 2, 2016
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி இரு பாடப் பிரிவினருக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன.
CBSE மாதிரி வினாத்தாட்கள் வெளியீடு
+ 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, CBSE வெளியிட்டு உள்ளது
சிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) மே1-ம், 2016ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) மே1-ம், 2016ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Thursday, December 24, 2015
மாதிரி வினாத்தாள் சி.பி.எஸ்.இ., ரிலீஸ்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலும்
, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அடிப்படையிலும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், வினா வங்கி, கூடுதல் வழிகாட்டி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை விட ஒரு படி மேலாக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், கணிதப்பதிவியல், பொருளியல், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. வினாத்தாள் விவரங்களை, http://cbseacademic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அடிப்படையிலும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், வினா வங்கி, கூடுதல் வழிகாட்டி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை விட ஒரு படி மேலாக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், கணிதப்பதிவியல், பொருளியல், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. வினாத்தாள் விவரங்களை, http://cbseacademic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
Friday, October 2, 2015
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.2016 மார்ச்சில் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சிபிஎஸ்இ அமைப்பின் இணையதளமான www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அதேபோன்று, இந்தப் பொதுத் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள விரும்புவோரும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். தாமதக் கட்டணம் இன்றி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 15 ஆகும்.
இணையம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800-11-8002 என்ற எண்ணில் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்கள் அழைக்கலாம். சிபிஎஸ்இ பள்ளிகளின் மூலம் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யும் பணி செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கியுள்ளது. பள்ளிகளின் மூலமாக இந்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
Tuesday, September 29, 2015
மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு...
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அமைப்பு அண்மையில் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
சி.பி.எஸ்.இ. அமைப்பின் இணைப்பைப் பெற்றுள்ள அனைத்துப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கையின்போது தாய்மொழி குறித்த விவரங்களையும், மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் கற்பிக்க விரும்பும் மொழிகளையும் சேர்க்கைப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
இதுதொடர்பான தேவையான அனைத்து மாற்றங்களையும் பள்ளி சேர்க்கைப் படிவங்களிலும், பதிவேடுகளிலும் மேற்கொள்ள வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், ஆங்கிலம், ஹிந்தியுடன் ஏதாவது அரசியல் சாசன சட்டத்தில் நவீன இந்திய மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றை மூன்றாவது மொழியாக குழந்தைகள் கற்கலாம்.
கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் அண்மையில் மூன்றாவது மொழியான ஜெர்மானிய மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருத மொழி கொண்டுவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குழந்தையின் தாய்மொழி விவரங்களைப் பதிவு செய்வதை சி.பி.எஸ்.இ. கட்டாயமாக்கியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)