Sunday, April 16, 2017

தனியார் பாட புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ., திடீர் தடை

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, தங்களின் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்ற பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும் என்ற, விதிமுறைகள் உள்ளன. ஆனாலும், பெரும்பாலான பள்ளிகள், தனியார் புத்தக நிறுவனங்களின், பாட புத்தகங்களை பயன்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், நியூ சரஸ்வதி புக் ஹவுஸ் என்ற நிறுவனம், பிளஸ் 2 வகுப்புக்கு, உடற்கல்வி மற்றும் சுகாதாரம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது. 

அதில், பெண்களின் உடல் அழகு எந்த அளவில் இருக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பாடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளும், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பள்ளிகள் இணைப்பு அங்கீகாரம் பெறும் போது, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்துவோம் என, உறுதி அளிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., வாரியம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

அதை மீறி, தனியார் புத்தகங்களையோ, பாடத்திட்டத்தை தாண்டி, வேறு புத்தகங்களையோ பயன்படுத்தினால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சி.பி.எஸ்.இ., வாரியம் திட்டமிட்டுள்ளது. 

2,000 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைந்த பள்ளிகள், தங்கள் வளாகத்திலும், வகுப்பறையிலும் என்னென்ன வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு, விதிகள் உள்ளன. சி.பி.எஸ்.இ., இணைப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் போது, இந்த விதிகளை பின்பற்றுவோம் என, விண்ணப்ப படிவத்தில், பள்ளிகள் உறுதி மொழி அளிக்க வேண்டும். 

அத்துடன், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக, 150 வகையான விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆனால், பல பள்ளிகள் இதைப் பின்பற்றவில்லை. 

அதனால், உள்கட்டமைப்பு தகவல்களை வெளியிடாத, 2,000 பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அந்த தொகையை செலுத்தி விளக்கம் அளிக்கும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment