Friday, September 15, 2017

2.4 கோடி புத்தகங்களுக்கு முன்பதிவு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது. 

ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்தின் போதும், என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்கள் கிடைக்காமல், தனியார் பதிப்பகங்களின் புத்தகங்களை கூடுதல் விலைக்கு, பெற்றோர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., சார்பில் இணையதளம், சமீபத்தில் துவக்கப்பட்டது. 

இந்த இணையதளத்தில், தங்களுக்கு தேவையான புத்தகங்களை பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று வரை, 2.4 கோடி புத்தகங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment