Wednesday, July 25, 2018

சிபிஎஸ்இ-ல் இருந்து மாநில திட்டத்துக்கு மாறும் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுத வேண்டியதில்லை - 2023 - 24 கல்வியாண்டு வரை விலக்கு தொடரும் தமிழக அரசு அரசாணை வெளியீடு

*சிபிஎஸ்இ உள்ளிட்ட வேறு பாட திட்டங்களில் இருந்து
, மாநில பாட திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் 2024 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது*.

*கட்டாய தமிழ் கற்கும் சட்டப்படி, 10ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.*
*இதற்கிடையே, சிபிஎஸ்இ உள்ளிட்ட வேறு பாட திட்ட பள்ளிகளில், 1ம் வகுப்பிற்கு கட்டாயம் தமிழ் கற்கும் சட்டம் 2015-16 கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. எனவே, படிப்படியாக, 2024 - 25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரை தமிழை கற்று தேர்வை எழுத வேண்டும்.*
*இந்நிலையில், வேறு மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு குடிபெயரும் மாணவர்கள், மாநில பாடதிட்ட பள்ளிகளில் 9,10ம் வகுப்புகளில் சேர, தமிழை தேர்வாக எழுத வேண்டியது இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது.*
*இதற்காக, வரும் 2023-24 ம் கல்வியாண்டு வரை விலக்கு அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.*
*எனினும், வேறு மாநிலங்களில் இருந்து, தமிழக சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ந்தால் இந்த விலக்கு பொருந்துமா என அரசாணையில் குறிப்பிடவில்லை.*

No comments:

Post a Comment